உலகமே அடங்கியது கொரோனாவின்
பிடியிலே/
சாதி மதம் காக்க வில்லை மனிதனவனை/
பல்லாயிரம் மக்களை
கொன்று குவித்ததே/
நாடு இனம் மொழி பார்க்க வில்லையே
ஆவியற்ற உடலை பார்த்தழவும்
உரிமையில்லை/
வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை
வந்ததென்னவோ/
ஊர் சுற்றும் காலம் எப்போதோ/
பள்ளிகள் மூடப்படும் ஊர் உறங்கி கொள்ளும்/
முகம் மறைக்கப்படும் என்று நினைத்தோமோ?/
நவ நாகரீக பூமி உறங்கட்டுமென
நினைத்தாயோ/
கொரோனா உன் எண்ணம் தான் என்னவோ?/
அலட்சியமின்றி அவசரமின்றி
பொறுமை காக்கின்றேன்/
விரைவில் விடுதலை
கொடுத்து விடு கொரோனாவே!/
Comments
Post a Comment