Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

16 | YS | மாற்றத்தை நோக்கி....

அரும் பெரும் வரலாறு கொண்டு
ஆசியாவின் அமிர்தமாய் மின்னிக்கொண்டிருந்த தீவொன்று

இயற்கை அன்னையின் இருப்பிடமாக ஈழம் எனும் பெயர் கொண்டு
தன்னிறைவாய் தாளமிட்ட தீவொன்று

மேற்குலக நாடுகள் மெய்சிலிர்த்துப் போகும்
மேன்மை வளம் பூத்துக் குலுங்கிய தீவொன்று

இப்பார் எனும் பெரும் புள்ளியை கொரானா எனும்
சிறு புள்ளி அடக்கியாளும் காலம் தனில்

வல்லரசு நாடுகள் வலுவிழந்து நிற்க உலகப்
பொருளாதாரம் படுப்பாதாளம் நோக்கி செல்ல

எம் ஈழமும் வறுமையின் வாசம் நுகர்ந்து கொண்டிருக்கிறது
காலனின் பாசக்கயிறு கணத்து கொண்டு இருக்கிறது

எம் தாய் ஈழத்தை கரம் தூக்கி நிமிர்ந்தெழ செய்ய
சேயாய் நாம் கரம் நீட்ட வேண்டிய காலமிது

விவசாயம் எனும் முதுகெலும்புக்கு
போசாக்கு எனும் எழுச்சியூட்டுவோம்
சமநிறைவு சமுதாயத்தை சாஸ்திரமாக்குவோம்
வருங்கால தலைமுறையை வசந்தமாக்குவோம்

தரமான வைத்தியத்தை நாடு முழுவதும் விஸ்தரிப்போம்
கல்வி எனும் பேராயுதத்தை இளைய தலைமுறைக்கு
இனபேதமின்றி ஒளிரச்செய்வோம்
நியாயம் எனும் சொல்லுக்கு வலுவூட்டுவோம்
எம் ஈழத்தாய் எழுந்து புன்னகையை உதிரவிட
புதல்வர்களாய் எம் கடமையை கண்ணியத்துடன் செய்ய களம் காண்போம்.

by
D. Devapragathi




Comments

  1. Superv pragathi keep it up❤️

    ReplyDelete
  2. Nice lines .👍♥️♥️♥️

    ReplyDelete
  3. அற்புதம் + வேற லெவல் + பிரமாதம்
    Fantastic pragathi...🔥😍🥳

    ReplyDelete
  4. Superb ma..... semma semma inum neraya ethir pakren ungalta ithe mathi🥰🥰🥰🥰

    ReplyDelete
  5. All are please like fb post as well

    https://www.facebook.com/102847548796098/posts/119168200497366/

    ReplyDelete
  6. அருமையான பதிவு

    ReplyDelete
  7. Thamil vardhaigal ekkavidhayin usage keka asayaga irukiradhu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

01 | YS | சீண்டிட்ட விளைவு

அன்று நீ வித்திட்ட விதை மனிதா இன்று உன்னை கலையறுக்க உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி. பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு. வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு கொரோனாவுக்கு பலபேர் உயிர் விருந்தாச்சு பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு . சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி. கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு. by T. Haroobana

25 | YS | சீரழிக்கும் கொரோனாவும் … கல்வி நிலையும்…

வகுப்பறை மறந்ததே ! கனவுகள் சிதைந்ததே ! எங்கள் கல்வி நம்பிக்கை கத்தி முனையில் தொக்கி நிக்கின்றதே ! கற்கும் மணம் தளர்வடைந்தது.  விடா முயற்சி உன் வருகையினால் சிறகடித்து ஓரிடம் ஒடிங்கிவிட்டது கோரோனாவே ! கற்பவரின் வாழ்வுக்கு கேள்விக்குறி சமமாக  பரவலடைந்த பாடசாலை கல்விக்கு முற்றுப்புள்ளி   பாலகரோ அரிச்சுவடி மறந்தனர் ! சுதந்திரக் கல்வி மணித்தியாலங்களாக சிறைப்பட்டு நிகல்நிலை கல்வி வாழ்வு கோலமாக வடித்தெடுக்கப்படுகின்றது. “கொடிய கால மாற்றம்  கல்விக்கு பாரிய ஏமாற்றம் “! தற்போதைய கல்வி மாணவரிடையே தொட்டிலில் உறங்கி சொப்பணம் காண்கின்றது .  நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் ! அடியோடு மாற்றம் ! பண்புதரமான பயிற்சியில்  தொழிநுட்ப வசதியில் ஆளுமைகள் மேம்பட கல்வி இன்று எம் மத்தியில் அரசாங்கத்தின் முழு வகிபாகத்திற்குள் இலவச கல்வியை தொழிநுட்ப மாற்றதிற்குள் உற்புகுத்தியது சூழ்நிலை மாற்றக்களாக  வசதி வாய்ப்புக்கள் சம பங்கெடுப்பாக  மாணவர்களுக்கு கிடைத்த்தாள் நிகழ் நிலை கல்வியும் வெற்றிகரம்  குவிக்கும் ! எழுத்தறிவு வீத மகத்துவம் பாதிக்கப்பட்டது இளைஞர் > யுவதிகள் பாடசாலை ...