கொரோனாவால் முடங்கிய நீ கொத்தடிமையாக கோடிஸ்வரனிடம் கையேந்தும் போது சற்று கவனி - நீ செய்த வேலை உன் சந்ததியை தாக்குமா? இல்லை உயர தூக்கமா என்று அது உன் கையிலே
விண்ணைத் தொட விவசாயம் செய்த விவசாயி இன்று வீட்டினுள் முடங்கியுள்ள வீடும் பேரும் இருந்தும் யாசகம் கேட்கும் யாசகர் வெறுமனே இருக்கும் வீதியை விட்டு விண்ணுக்கு செல்கின்றனர்.
போசாக்கு இல்லாத குழந்தைகளுக்கு போஷாக்கு என்ற நிலைக்காக சத்துணவு பாடசாலை தோரும் வழங்கியபோது அதற்காய் பாடசாலை சென்ற சிறார்கள் இன்று பஞ்ச பட்டினியால் வாடுகின்றனர்.
அனைவருக்கும் கல்வி என்ற நிலை தடம்மாறி பணம் படைத்தவனே படிக்கலாம் என்றாகிவிட்டது தொழில்நுட்பத்தை தூணாய் நம்பிய இளைஞர்கள் இன்று தன் எண்ணத்தை தொலைத்து வாழ்கின்றனர்.
எப்படியாவது எதிர்கால சந்ததி நோயற்று வாழ வேண்டுமென எண்ணி சுகாதாரமும் சுத்தமும் பேணிய நாட்டின் அபிவிருத்தி அர்த்தமற்று மரணங்களின் மேடையாய் ஆகிவிட்டது இன்று கொரோனாவால்.
by D. Prashandhanee
(F17)
Comments
Post a Comment