கடிகார முற்களாய் அழகாய் நகர்ந்தன.
அம் முற்களோ ! உலர் மின்கலம் இழந்த கடிகாரமாய்
சிதைவடையும் என எள்ளளவும் எண்ணாத போது
வைரஸ் என்ற வார்த்தை - தினந்தேறும்
வாதமிடுகின்றது நம்முடன்....
முகக் கவசமும் > கிருமிக் கொல்லியும் கொண்டு
எதிர்த்திட துடிக்கும் தருணம் தன்னில்
ஓடும் நீர் கொண்டு
கைகளை சுத்தமாகக் கழுவிட
கரை புரண்டு ஓடுகிறதாம் கொரோனா வைரஸ்....
இக் கடலால் சூழப்பட்ட தீவு தன்னில்
நீர் இன்றி தவித்திடும் மனித இனங்கள்
வற்றிப் போன வரம்புகளை மட்டுமே காண்கின்றன...
"நீர் இன்றி அமையாது உலகு" - என்ற
கூற்று கரை படிந்து - இன்றோ!
"நீர் இன்றி தவிக்கும் மானிடம்"...
என்றுதான் மாற்றம் பெற்றுள்ளது.
பருகிட நீரும் > மனித பணிகளை முடித்திட
பக்க விளைவற்ற சுகாதார வசதிகளோடு
எண்ணற்ற வசதிகளை வேண்டி நிற்பதால்
வற்றா கிணறுகளும் > வாழ்கையை நடத்திட
வளம்மிக்க சுகாதார வசதிகளும்
வாழ்வை நிலையாகக் காக்கட்டும்.....
By K. Shiromi
Comments
Post a Comment