Skip to main content

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

01 | YS | சீண்டிட்ட விளைவு



அன்று நீ வித்திட்ட விதை மனிதா
இன்று உன்னை கலையறுக்க
உலகம் சுற்றி உன் வீடு தேடிவருகிறது
கொரோனாவாக உருவெடுத்து பழிதீர்க்க மனிதா

சாமிக்கும் இங்கு சங்கடங்கள் நேர்ந்திடுச்சி
பூட்டாத கதவுமிங்கே பூட்டும் படியாச்சு வீணாக சுற்றுவதை கொரோனா குறைச்சிடுச்சி
குடும்பத்தை நெருங்கும் படி ஒன்றுசேர்த்துருச்சி.

பாசத்தோடு வாழ வழிகாட்டிடுச்சி
பணம் காசுல எப்படி வாழணும்னு சொல்லிருச்சு.
வீண் செலவு செய்யுறத குறைச்சுடுச்சு வினோதமாய் வாழ வழிகாட்டிடுச்சு

கொரோனாவுக்கு பலபேர்
உயிர் விருந்தாச்சு
பலபேர் விடும் சாபத்துக்கும் காரணம் ஆகிடுச்சு .
சுகாதாரம் அறிந்திட உதவிடுச்சி.
கடவுள்னு ஒருத்தர் இருக்காருனு நினைவுபடுத்திடுச்சு

இயற்கை அன்னையை சீண்டி விட்டாச்சு அவள் மறு முகத்தை காட்டும்படி ஆச்சு கொரோனாவோடு வாழும் படி ஆச்சு
அத விட்டாவேற வழி இல்லனும் போச்சு.

by
T. Haroobana


Comments

  1. அருமையான கவி வரிகள் வழ்த்துகள்

    ReplyDelete
  2. Super Haroobana congratulations ....

    ReplyDelete
  3. அர்த்தமிகு வரிகள் ஹரூபனா வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரி நன்று.

    ReplyDelete
  5. அருமையான வரிகள்

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அருமை

    ReplyDelete
  7. How awesome lines my dr super congratulations

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சிறந்த வரிகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

26 | YJ | தழைக்க ஏங்கும் செந்நெல்

உணவின் அருமை அறியாது உன்னதமான என்னை அன்று உதாசீனமாய் வீசி எறிந்தாயே சேற்றோடு போராடுபவனின் உழைக்கும் கரங்களால் பிரசவிக்கப்பட்ட செந்நெல் நான்- இன்று என் ஏளனப்பார்வைக்கு முன் நீ விழிகளும் உற்று நோக்கிட போராடும் சிறுமையை விஞ்சிய சிறுமை கொரோனா என்னும் பெயரால் காணாமல் போனது உன் தலைக்கனப் பெருமை அன்று நீ என்னை வீசினாய் இன்று எனக்காக ஏங்குகின்றாய் இத்தனை யுகங்களாக என்னை இரைத்து எறிந்தது போதும் நாளைய உலகை நீ காண இக்கனமே என்னை பூமித்தாயோடு இணையச்செய்வாய் நாளை உன் பசிப்பிணிக்கு நானே மருந்தாக உதிப்பேன். by S. Shakthi