Skip to main content

Posts

SUNFO Agaramuthali Tamil Poetry Online Competition 2021 | SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

62 | CS | கொரோனா வைரஸ்

உயிரை எடுக்கத் துடிக்கிறாய்... உறவை இழக்க தவிக்கிறோம்... அலை அலையாய் வருந்துகிறோம்... கொலை கொலையாய் செய்கிறார்.. இறைவன் உடைய சாபமோ... கொடூர கொரோனா... கத்தியின்றி... ரத்தமின்றி..... யுத்தம் ஒன்று நிகழ்கிறது.... அது உலக மக்களை அச்சமடையச் செய்தது... தூரத்தில் நானிருந்தால் இலங்கையை துரத்தும் கொரோனா என்னை கவலையடையச் செய்தது.. கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் அடங்காமல் தெருவில் இருக்கின்றீர்கள்... செய்து வைத்த பாவமெல்லாம்.... வேட்டையாட வேண்டி இன்று கொன்றெடுத்துச் செல்கிறது... நம்மை கொரோனா எனும் பெயரினால் சாதி மதம் பார்த்து மனம் சஞ்சளித்துப் போன இங்கு சாவுக்கு பாரபட்சம் இல்லையென்று சரித்திரத்தில் காட்டிவிட்டது கொரோனா... கொரோனா என்ற அசுரனை அழித்து எம்மையும் எம் அகிலத்தையும் காப்பாற்றுவோம். by K Aananda kala

61 | YS | நேசி உன் சூழலை

ஓயாத ஓசையெழுப்பும் நதிகளின் கீதத்திற்கு  அழகாய் அசைந்தாடும் மரங்களும் தேனீ தன் கை கோர்த்து விளையாடிய களைப்பில்  உறங்கும் மலர்களை கண் கூச செய்து எழுப்பிடும்  கதிரவனும் - அற்புதம் நிறைந்த இப்பூமியின் மாயாஜாலக்காரர்கள் அறுசுவை உணவுக்காய் அரைகுறை வாழ்க்கை வாழும் மனிதன் - நாசம் செய்திட ஏதுமில்லை பருவம் மறந்து பெய்யும் மழை - அணலாய் எரிக்கும்  வெயில் - மாறிப்போன பருவம் பழையன மீட்க செய்திடுவோமே மீள் சுழற்சி வரையறையின்றிய பாவனையின் பயனாய்  பல தலைமுறையின் தாகம் தீர்த்திட இனி இல்லை  தண்ணீர் மரங்களற்ற பூமிதனை காண இச்சையில்லா  மேகம் பொழிந்ததுவே - பொருந்தாத மாதத்தில் போதும் விண்ணிற்கு ஏணியான கட்டிடஙகளும்  கண்மூடி ஆடிய ஆட்டத்தின் முடிவு விண்மூடி போனதே கடைக்கண் பார்வை வேண்டாம் - நெற்றிக்கண் கொண்டு செய்திடுவோமே  பச்சிளம் குழந்தையின் உள்ளம் போலே தூய்மை நிறைந்த உலகினை By R. Rushanthi

60 | CJ | வாழ்க்கையில் ஆசைப் பட்டதெல்லாம்

வாழ்க்கையில் ஆசைப்  பட்டதெல்லாம் கிடைக்கவில்லையே என்று  கவலை கொள்ளாதே...  ஆனால்  உனக்கு  தேவையானது எல்லாம்  அப்போதே கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது….!!! தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட…. தவறை சுட்டிக்காட்டி விட்டு  எதிரியாக வாழ்ந்து விடலாம்….. by P.Ojasvini 

59 | CS | ஏழை

ஆடம்பரமாக வாழ ஆசையில்லை     இறுதி வரை இறைவனை தவிர  வேறு எவரிடமும் கையேந்தாமல்    வாழவே ஆசை ..! அரண்மனைக்கும் அஸ்திவாரம் நிலம் தான்      குடிசைக்கும்  அஸ்திவாரம் நிலம் தான்  எனவே வாழ்வில் ஏழை , பணக்காரன்     என்ற பாகுபாடு இல்லை ...!  கோபம் , பொறாமை மற்றும் சோம்பேறி      தனத்தில் ஏழையாக இரு வாழ்வு செழிக்கும் வளம் பெறும் ...!  ஏழைக்கு கரம் நீட்டி உதவி செய்         நீ சொர்க்க வாசல் திறப்பாய்  உன் சந்ததியினர் சொர்க்க வாழக்;கை     வாழ்வார் ...! ஏழை என்பது வறுமையில் வாடுவது என்று       எளிதாக கூறமுடியும் உண்மையில் இங்கு  மட்டுமே அன்பு , நம்பிக்கைக்கு       பஞ்சம் இல்லா இடமாகும் ...!        

58 | CS | பசியை ஒழிதல்

விவசாயின் உழைப்பு வீணாகுமா ! மக்களின் கனவு நினைவாகுமா !  பசியின் மருந்து உணவாகுமோ ! உணவின் பாதுகாப்பு மேம்படுமோ ! தாயின் கருவறை காப்பு  செடியின் கருவறை வித்து  மனிதனின் முதிர்ச்சி முதுமை  தாவரத்தின் முதிர்ச்சி போசணை  அன்பின் விதையை விதைப்போம்  விவசாயத்தின் அருமையை வெளிப்படுத்துவோம்  பசியின் கொடுமையை அழிப்போம்  உணவின் தரத்தை உயர்த்துவோம் by  N. Kavilakshika

57 | YS | சமூக ஒற்றுமை

சிதைந்து போன சிற்பங்களாக  பிறந்து சீர்படாத வாழ்வுடன் மெய்ப்படாத கனவுகளுடன்  என்றாவது மாறிவிடும் என்ற  குருட்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தது போதும்..... காத்திருந்த காலம் தாழ்த்தி  சுழன்று கொண்டிருக்கும் புவி மண்டலத்தில் கூடுகளாக வாழ்ந்துவிட்டு போகவா எண்ணம்??? மனிதனே மனிதனை உண்டு மனிதத்தை மண்ணுடன் புதைத்து விட்டு தனிமையிலேயே  உளன்று கொண்டிருந்தது இன்றுடன் போதும் !!!! சரித்திர பக்கத்தை சிறிது  சற்றே நோக்கி பார்த்தால் மானுட வலிமைக்கு கிடைத்த  வரங்களோ ஏராளம் பேச்சில் மட்டுமல்ல  எமது மூச்சிலும் வேண்டும்  ஒற்றுமை துப்பாக்கி ரவைகளுக்கும்  குண்டுகளுக்கும் பலிகொடுத்தது  போதும் !!!! எமது வாழ்வுக்காய் எமது கைகளைக்கோர்த்து  தலை நிமிர்ந்திட ஓங்கும் வையகம்..... சாக்கடையில் புரளும் பன்றியாய் வாழ்ந்தது போதும் இனியும் தாமதம் வேண்டும் என்று  எண்ணாதே இனம் , மதம் , சாதி என  துண்டு பட்டது போதும்  ஒன்று பட்டு எழுந்திடுவோம் எமது சமூகத்தின் ஒற்றுமைக்கு !!! by S. Nishanthi

56 | YS | மதிப்பு மிக்கதோர் சூழல்

அழகே ! பேரழகே.. ! - இயற்கை  அன்னையின்அரும்பெரும் கொடையே ! இறைவனே இயற்கை - இவ்வியற்கையே  இறைவன் ! நாமெல்லாம் இவர்களின் குழந்தைகள் ! பச்சை வண்ண சூழலே ஓவியம் ..! - இருளில்  மூழ்கிய இரவை வழியனுப்பி  வெளிச்சத்தை பரப்பி... - சாந்தமான  பல்வியல் தொடங்கி.... சங்கீதமாய் மலரும் காலைப் பொழுதினை  என்னவென்று வர்ணிப்பது  நதி என்னும் பெண் மகளின் சந்தோஷ புன்னகையை ! - இயற்கையின் கானம் ரீங்காரமிடும் வண்டுகளும்  பூக்களை தழுவும் தேனீ கூட்டமும்  இயற்கையின் வர்ணஜாலம்.. ! மண் வாசனை வீசும் அத்தருணம் - தென்றல் பூமி தாயை தழுவும் - அந்த  நொடிகளை வர்ணிக்க கவிதைகள்  போதவில்லை !  பறவைகளின் கீச்சொலியே - சங்கீத  ஸ்வரங்களாக மாறும் ! பூமி தாயின் சுற்றுகையே - நம்  பிறவியின் தத்ததுவம்  சூழலை பிரகாசிக்க வைக்கும் மின்னல் - மனதை  சிறை பிடிக்கும் இடி முழக்கம் ! மேகம் மழையாகப் பொழியும் பூமி தாய் மனம் குளிர்வாள்... இக்காட்சியே இயற்கையின் செய்யுள்  இவையெல்லாம் காணும் வரம் - மானிடனாய்  பிறந்து ஆறறிவு கொண்ட எமக்கு கிடைத்துள்ளது  நம் உணர்வ...